×

8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலக்கரி தட்டுப்பாடு : பஞ்சாப், உ.பி.மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் மின்வெட்டு!!

டெல்லி ; கோடைகாலம் தொடங்கி மின்சார நுகர்வு அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நாட்டின் அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறித்து நோமுரா அறிக்கை ஒன்றை வெளியிட்டது.அதில் 173 அனல் மின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட மின்சார ஒன்றிய ஆணையம், மொத்தத்தில் 21.93 மில்லியன் டன் அளவிற்கே நிலக்கரி இருப்பதை கண்டறிந்துள்ளது. ஆனால் கையிருப்பில் இருக்க வேண்டிய நிலக்கரி அளவோ 66.32 மில்லியன் டன் ஆக உள்ளது என்றும் 2014ம் ஆண்டிற்கு பின் தற்போது தான் குறைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

24 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் இருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதிமுறைகளுக்கு மாறாக வெறும் 9 நாட்களுக்கு மட்டுமே உள்ளதையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், ஒன்றிய மின்சார ஆணையத்தின் தினசரி நிலக்கரி அறிக்கையை சுட்டிக் காட்டியுள்ள நோமுரா அரசு கட்டுப்பாட்டில் உள்ள 150 அனல்மின் நிலையங்களில் மட்டும் 81ல் மிக குறைந்த அளவில் நிலக்கரி மட்டுமே உள்ளதாக கூறுகிறது.

பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி இருப்பு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க ஒன்றிய அரசு தவறியதன் விளைவாக மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரியை வழங்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கு ஏற்ப போதிய இருப்புப் பாதைகள் இல்லாததும் இந்த நெருக்கடி நிலையை தீவிரப்படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள நோமுரா கோடை வெயிலின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மின்சாரத் தேவை அதீதமாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


Tags : Punjab, ,U. GP ,Marathium , Coal, scarcity, Punjab, UP Marathas, power cuts
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து