×

கோவை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..!

கோவை: கோவை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். டிஎஸ்பி திவ்யா தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் உமா சக்தி வாகனத்தில் இருந்து ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்த பணம் வைத்திருந்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவரது காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த பணம் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட போக்குவரத்து அலுவலகங்களில் மாதம், மாதம் வாங்க கூடிய மாமூல் பணம் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த பணத்தை இதற்கு முன்பு பணியாற்றிய ஆபிஸ் அசிஸ்டன்ட் செல்வராஜ் என்பவர் மூலம் இந்த பணத்தை பெற்றதும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Gov ,Office of the Deputy Director of Transport ,Department of Surveyor Action , 28.35 lakh unaccounted for in Coimbatore Joint Commissioner of Transport: Anti-Corruption Action
× RELATED ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால்...