நான் செய்தது தவறு: ரிஷப் பன்ட் பேட்டி

தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் அளித்த பேட்டி: “ராஜஸ்தான் அணி மிக சிறப்பாக பந்துவீசியது, கடைசி நேரத்தில் பவலின் அதிரடி ஆட்டம் எங்களுக்கு சிறிய நம்பிக்கையை கொடுத்தது. கடைசி ஓவரின் 3வது பந்து நோபால் தான் என்பது மைதானத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும், ஆனால் நடுவர் அதற்கு நோபால் கொடுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. நோபால் கொடுக்கப்பட்டிருந்தால் அது இந்த போட்டியில் பெரும் திருப்புமுனையாக அமைந்திருக்கும்.

3வது நடுவர் தலையிட்டு நோபால் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவை களத்திற்குள் அனுப்பியது நிச்சயம் சரியான முறை இல்லைதான். அது தவறுதான். ஆனால் எங்களுக்கு நடந்ததும் பெரிய தவறுதான்” என்று தெரிவித்தார்.

Related Stories: