×

வடபழநி, திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், உட்பட10 திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்!

சென்னை : சென்னை வடபழநி, அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், பழநி அருள்மிகு தண்டாயுதபாணிசுவமி திருக்கோயில்,, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர்திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி  திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், மருதமலைஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், பண்ணாரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், உட்பட 10 திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை கணொலி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடங்கி வைத்தார்.

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சரின் வழிகாட்டிதலின்படி கடந்த சட்டமன்ற மானியக்கோரிக்கையில்  முதற்கட்டமாக 10 திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள்  திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள் தோறும் வழங்கப்படும், இதனால் 10000 முதல் திருவிழா காலங்களில் 25000 மேற்ப்பட்ட பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள்.

அதற்கு தகுந்தார் போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள்  தரமாக தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள 341 திருக்கோயில்களின் பிரசாதம் , நைவேத்யம், உணவு தொடர்பாக ஒன்றிய அரசிடம் தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர். என்பதற்கேற்ப பழநி, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி போன்ற திருக்கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டு 25000 மேற்ப்பட்ட பக்தர்கள் பயனைடைந்து வருகின்றன ,

தங்கு தடையின்றி , இடர்களைக் கடந்து இந்த ஆட்சியின் ஆன்மிகப் பயணம் தொடர்கிறது, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில்  100 க்கும் மேல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, அதில் உள்ள 1691 பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். கடந்த  மானியக் கோரிக்கையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து 2022-23 இந்த ஆண்டு மானியக்கோரிக்கையின் போதுஅறிவிக்கப்படும் , கொரோனா தொற்று காரனமாக திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்கள்  வருமுன் காப்போம்   என்பதே தாரக மந்திரத்திற்கு. கேற்ப அனைவரும் முகக் கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, 5 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தோருக்கு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் மூலம் வழங்கப்பட உள்ளன.

மேலும் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் , பக்தர்கள் இடையே முரண்பாடு ஏற்படாமல் தீர்வு காணப்படும்  முறைகேடுகளை களைய இந்து அறநிலையத்துறை சட்டங்கள் வலிமையாக இருப்பதால் சிதம்பரம் கோயில் தொடர்பாக புதிய சட்டம் தேவையில்லை, சிதம்பரம் கோயில் தொடர்பான நீதிபதி உத்தரவு நகல் நேற்று பெறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி புதிய குழு அமைத்து தீர்வு காண உள்ளோம். தீட்சிதர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை செயல்படும், ஆயிரம் ஆண்டு பழைமையான திருக்கோயில்கள் சீரமைக்க இந்த ஆண்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறைகளை சுட்டிக்காட்டினால் நிறைவு செய்வோம்.

பார்த்தசாரதி திருக்கோயில் திருக்குளம் பக்தர்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்தது. நடிகை குஷ்பு பார்த்ரசாரதி திருக்கோயில் திருக்குளத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியதற்கு துறை மூலம் விளக்கமளிக்கப்பட்டு விட்டது, உழவாரப் பணி தொடர்பாக கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என்றார்கள் , தற்போது அதை சரியசெய்யும் விதமாக ஆன்லைன் மூலம் உழவாரப் பணி தொடர்பாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் கூடினர் . கோயில்களில் திருவிழா மற்றும் , பிற நாட்கள் வருமானம் இடையே வேறுபாடு இருக்கும், திருக்கோயில் இடங்களில் குடியிருப்போருக்கான மாத வாடகையை முறைப்படுத்தியதால் கடந்த 2 மாதத்தில் இதுவரை இல்லாதளவு ரூபாய் 170 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

பழனி கோயிலில் மாதம் ரூபாய் 5 கோடி வருமானம் வருகிறது.மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் வீரவசுந்தராயர் மண்டபம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டு , அதற்கான கற்கள் நாமக்கல்லில் இருந்து பெறப்படுகிறது. தற்போது வெளிப்பிரகாரங்களில் ரூபாய் 6 கோடியில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. ,இப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்படும் சித்திரைத் திருவிழாவில் இருவர் இறந்தது துரதிருஷ்டவசாமனது , வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க இறைவன் துணையுடன் , பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று கூறினார்.

Tags : Vadapalani ,Tiruchendur ,Srirangam , Vadapalani, Thiruchendur, Srirangam, Temple, Devotees, Free, Offerings
× RELATED கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!