×

ஐபிஎல் NO-ball சர்ச்சை: நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்-க்கு 100% அபராதம்

மும்பை: நேற்று நடைபெற்ற டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதித்ததுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

நேற்றைய RR vs DC போட்டியில், 20-வது ஓவரில் மெக்காய் வீசிய 3-வது பந்து பேட்டர் போவெல் இடுப்பு உயரம் வீசப்பட்டு, கள நடுவர் NO-ball கொடுக்காததால் மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனிடையே மைதானத்துக்கு வெளியே இருந்த டெல்லி அணியின் கேப்டன் பண்ட் விரக்தி அடைந்து பேட்டர்களை களத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தியது பேசு பொருளாகியது.

இதுகுறித்து அவர் பேசிய போது:
NO-ball கொடுக்காதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனைவருக்கும் NO-ball என்று தெரிந்தது. இதில் 3-வது நடுவர் தலையிட்டு அது NO-ball என கூறியிருக்க வேண்டும். நான் வ்விதியை மாற்ற முடியாது. நாங்கள் இலக்கை நெருங்கி வந்ததால்தான் இந்த முடிவு கொஞ்சம் வலிக்கிறது என  டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறினார்.

நடுவரின் முடிவு சரியோ அல்லது தவறோ அதை ஏற்க வேண்டும் என டெல்லி அணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன், கேப்டன் பண்ட்-க்கு அறிவுரை வழங்கினார்.


Tags : IPL ,Delhi Capitals ,Rishabh Pund , IPL, NO-ball controversy, Delhi Capitals, Captain Rishabh Pund, fined
× RELATED 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...