மஞ்சூர் அருகே பழங்குடியினர் கிராமத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு முகாம்-அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பு

மஞ்சூர் : மஞ்சூர் அருகே பழங்குடியினர் கிராமத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக எல்லையை ஒட்டிய கேரளா வனப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதால் போலீசார் முகாம்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மாவோயிஸ்ட் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் அவர்களின் குறைகள் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நேற்று மஞ்சூர் அருகே உள்ள தும்பனேரிகம்பை பழங்குடியினர் கிராமத்தில் மாவோயிஸ்ட் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. குந்தா தாசில்தார் இந்திரா தலைமை தாங்கினார்.

 ஊட்டி ரூரல் இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சீனிவாசன், வட்ட வழங்கல் அலுவலர் முனீஸ்வரன், குந்தா ஊராட்சி தலைவர் பிரகாஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிந்துகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பழங்குடி மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்ததுடன் வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, உதவித்தொகை வழங்கவும் மற்றும் தும்பனேரிகம்பை பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தல் உள்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரியும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

முகாமில், குந்தா வருவாய் ஆய்வாளர் வேடியப்பன், பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நவீன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஆஷிக்பரித், கிராமநிர்வாக அலுவலர் ஐயப்பன், உதவியாளர் பிரபு மற்றும் வனத்துறை, கல்வி, அரசு போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பந்தலூர்:  பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட முள்ளன்வயல் அருகே  கோட்டக்கரை, நெல்லிக்கரை, செவிடன்கொல்லி, அயனிபுறா, புதுச்சேரி உள்ளிட்ட  பழங்குடியினர் கிராமங்களில் பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் தேவாலா டிஎஸ்பி ராமலிங்கம்,  அம்பலமூலா  இன்ஸ்பெக்டர் சித்ரா, ஆர்ஐ தேவராஜ், முதுநிலை வருவாய்  ஆய்வாலர் காமு உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மக்களிடம் மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தார். அதன்பின் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும். குடியிருக்கும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். தெருவிளக்கு, குடிநீர் வசதி நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என பழங்குடியினர் மக்கள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

தும்பனேரிகம்பை,   குஞ்சப்பனை, வாழைத்தோட்டம், கொப்பரக்கடவு, சின்னாலன் கொம்பை, சடையன்கொம்பை,  பாலவாடி, காமராஜ் நகர், குறிஞ்சிநகர் மற்றும் நெல்லிபாரா, கோட்டகாரா,  செவிடன்கொல்லி, அயனிபாரா, புதுச்சேரி மற்றும் தோட்டபெரா ஆகிய கிராமங்களில் குறைதீர்  முகாம் நடந்தது. இதில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை  சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர். பழங்குடியின மக்களிடம் இருந்து குறைகள்  ேகட்கப்பட்டு 171 மனுக்கள் பெறப்பட்டன.

Related Stories: