×

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு

வேலூர் : வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ₹30க்கு விற்பனையானது.வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து லாரி உள்ளிட்ட வாகனங்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. அதனால் வரத்து பாதிக்கப்பட்டு அனைத்து காய்கறிகள் விலையும் கிடு, கிடுவென உயர்ந்தன.இந்நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக நாள்தோறும் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்து வருகிறது. வரத்து அதிகம் காரணமாக கடந்த மாதத்திற்கு மேலாக தக்காளி விலை கடும் விழுச்சி அடைந்தது. கடந்த சில நாட்களாக தக்காளி விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் ஒரு கிலோ ₹20 முதல் ₹30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘வேலூர் மார்க்கெட்டிற்கு ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், வேலூர் மாவட்டத்தில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தினமும் மார்க்கெட்டிற்கு வழக்கத்தைவிட அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் மற்றும் சுபமுகூர்த்தம் என்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விலையும் உயர்ந்துள்ளது’. என்றனர்.



Tags : Velur Netaji market , Vellore: A kilo of tomatoes sold for ₹ 30 at the Vellore Netaji Market yesterday.
× RELATED கோயிலில் தரமற்ற பிரசாதம் விற்ற...