இலங்கையில் பொருளாதார நெருக்கடி: மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி கடன் உதவி

வாஷிங்டன்: ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கியுள்ளது. இந்த நீதியானது அவசர மருந்துப் பொருள்மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய  வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த சில மாதங்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்பட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இலங்கைக்கு உலக வங்கி ரூ.4,500 கோடி கடன் உதவி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தங்கள் நாட்டிற்கு அவசர கால தேவைக்காக கடன் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். IMF எனப்படும் சர்வதேச நாணய  நிதியத்தின் உதவி கிடைக்க தாமதமாகும் நிலையில், உலக வங்கி ரூ.2,250 கோடியில் இருந்து ரூ.4,500 கோடி வரை கடன் தர முன்வந்துள்ளதாக இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்தியாவும் மேலும் ரூ.3,750 கோடி தந்து உதவ உள்ளதாக இலங்கை நிதியமைச்சர் தெரிவித்தார். சீனா, ஜப்பான், மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் கடன் கேட்டு அணுகியுள்ளதாக இலங்கை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 5 ஆயிரம் டன் அரிசி, மருந்துகளுடன், கடன் உதவியும் தருவதாக சீனா அண்மையில் தெரிவித்திருந்தது.

Related Stories: