×

நெல்லையில் தாக்கப்பட்ட எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

நெல்லை:  நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் மார்க்ரெட் தெரசா நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழவூரில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸியை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் உதவி ஆய்வாளருக்கு இடது கன்னம், இடது கழுத்து மற்றும் வலது மார்பு ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆறுமுகம் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து உதவி ஆய்வாளர் அவருக்கு அபராதம் விதித்துள்ளார். அந்த பகையை மனதில் வைத்து கொண்டு நேற்று பணியில் இருந்தபோது கையில் இருந்த சின்ன கத்தியால் மார்க்ரெட் கிரேஸியை ஆறுமுகம் குத்தியுள்ளார்.

இந்த நிலையில், நெல்லையில் தாக்கப்பட்ட எஸ்.ஐ. மார்க்ரெட் தெரசாவிடம் போனில் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்..சகோதரி மார்க்ரெட் தெரசாவிற்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்க அறிவுறுத்தியுள்ளேன்,என்றார்.


Tags : GI Margaret ,Theresa ,KKA Stalin , Nellai, S.I. Margaret Theresa, Chief MK Stalin
× RELATED அரசியலில் இருந்து தெரசா மே விலகல்