கொரோனாவை விரைந்து குணப்படுத்தும் இன்டோமெதசின் மருந்து : சென்னை ஐஐடி மருத்துவக்குழு ஆய்வில் தகவல்

சென்னை : விலை மலிவான இன்டோமெதசின் என்ற மருந்து கொரோனாவை விரைந்து குணப்படுத்துவதாக சென்னை ஐஐடி மருத்துவ குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடர்பான சிகிச்சைகளுக்கு  இன்டோமெதசின் என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவது குறித்து சென்னை ஐஐடி மருத்துவக் குழு ஆய்வு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. இந்த மருந்தை எடுத்துக் கொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை என்றும் 4 நாட்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

 இன்டோமெதசின் மருந்தின் செயல்திறனை நிரூபித்த சென்னை ஐஐடி மருத்துவக்குழுவின் ஆய்விற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை ஐஐடி ஆய்விற்கு சர்வதேச விமசகர்கள் 5க்கு 4 என்ற மதிப்பீடு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்தும் இன்டோமெதசின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்று ஐஐடி மருத்துவ குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: