×

வெற்றிலை போடும் பழக்கம் குறைந்துள்ளது சுவீட் பீடா சாப்பிடுவதை தான் இளைஞர்கள் விரும்புகின்றனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கருப்பு, வெள்ளை வெற்றிலையை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த வெற்றிலை மருத்துவ குணம் கொண்டது. வீரியமிக்கதாகவும் இருப்பதால் மருத்துவத்துறை பயன்படுத்தும் விதமாக வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு முன்வரவேண்டும்” என்றார்.

இதேபோல், விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் உள்ள லால்பேட்டையில் வெற்றிலை அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால், ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டக்கலை கல்லூரி அமைக்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்து வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:  தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை ஆராய்ச்சி என்பது வேளாண் கல்லூரிகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில் பெரியகுளம், லால்பேட்டை, கும்பகோணம் வெற்றிலை எல்லாம் சிறப்பு பெற்று இருந்தது. உணவு சாப்பிட்டாலே வெற்றிலை சாப்பிடுவார்கள். ஆனால் இன்றுள்ள இளைஞர்கள் வெற்றிலை போடுவதில்லை. சுவீட் பீடா சாப்பிடுகின்றனர். இதனால் வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து விட்டது. வெற்றிலை விவசாயத்தை ஊக்குவிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் ஏக்கருக்கு 10 ஆயிரம் அரசு மானியம் வழங்கி வருகிறது. 100 ஏக்கர் வைத்திருந்தால் 10 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 778 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Mm. ,R. KK Panneerselvam , Betel, Sweet Beta, Youth, Minister MRK Panneerselvam,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் 8.31 மிமீ சராசரி மழை பதிவு