×

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை நிறுத்த நடவடிக்கை ேதவை: கே.பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கடிதம்

சென்னை: சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தேசிய குடும்ப நல 5வது ஆய்வு 2019-20 முடிவுகள், நாட்டிலேயே குடும்ப வன்முறை நிகழ்வுகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது எனத் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில், குடும்ப வன்முறை அதிகமாக இருப்பது ஆழ்ந்த கவலை தருகிறது. எனவே, தமிழ் நாட்டில் நாம் ஒரு மாறுபட்ட சூழலை உருவாக்குவது அவசியமாகிறது.

குடும்ப வன்முறையை எதிர்கொண்ட பெண்களுக்கு மாவட்டம் தோறும் இலவச சட்ட உதவி மையங்களை அதிகரிக்க வேண்டும். குடும்ப வன்முறையினால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்களுக்கு கலந்தாலோசனை மையங்களை வட்ட அளவில் ஏற்படுத்த வேண்டும்.பெண்களுக்கான வருமான வாய்ப்புகளை அதிகரிப்பது, பிரச்சனைகளைத் துணிவுடன் எதிர்கொள்ள உதவும். மகளிர் சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்த வேண்டும். பெண்களுக்கு நில உரிமை மற்றும் வாரிசு உரிமையை உறுதி செய்யும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.  குடிநோய் மரணங்களுக்கு காப்பீட்டினை உறுதி செய்ய வேண்டும். குடும்ப வன்முறை ஒரு குற்றச் செயல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாலின நிகர்நிலைக் கண்ணோட்டத்தை பரவலாக்கும் விதத்தில், மேற்கண்ட நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

Tags : K. Balakrishnan , Domestic Violence, Action, K. Balakrishnan,
× RELATED தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்...