மேம்பாலத்தில் ஓட ஓட விரட்டி தங்கை கணவரை வெட்டிய ரவுடி: திருச்சியில் பட்டபகலில் பயங்கரம்

திருச்சி: மனைவியுடன் தொடர்பு என சந்தேகத்தால் திருச்சியில் மேம்பாலத்தில் ஓட ஓட விரட்டி தங்கை கணவரை வெட்டிய ரவுடியை போலீசார் ைகது செய்தனர். திருச்சி தேவதானம் வீரமுத்து நகரை சேர்ந்தவர் சந்துரு (40). பிரபல ரவுடியான இவர் மீது, கோட்டை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி சத்யா (37). கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சத்யா, கணவரை பிரிந்து திருவானைக்காவலில் சந்துருவின் தங்கை கணவர் சிவக்குமார் (45) வீட்டில் கடந்த ஓராண்டுக்கு மேல் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் சிவக்குமார், திருவானைக்காவல் மேம்பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

இந்த பாலத்தில் வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ரவுடி சந்துரு, சிவகுமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வெட்டினார். இதில் சுதாரித்துக்கொண்ட சிவக்குமார் கையால் தடுத்தபோது அவரது இடது கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே சிவக்குமார் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்.

இதையடுத்து சந்துருவும் அவரை அரிவாளுடன் விரட்டிக்கொண்டு ஓடினார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அவ்வழியே சென்றவர்கள் அவர்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அப்போது அந்த வழியே வந்த மாநகர எஸ்பிசிஐடி போலீஸ் ஏட்டு ராஜாமணி, ரவுடி சந்துருவை மடக்கி பிடித்து ஸ்ரீ ரங்கம் போலீசில் ஒப்படைத்தார். சிவகுமார் ஸ்ரீ ரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ஸ்ரீ ரங்கம் போலீசார் வழக்கு பதிந்து சந்துருவை கைது செய்தனர். தங்கை  மரணமடைந்து விட்டதால் தன்  மனைவிக்கும் தங்கை கணவர் சிவக்குமாருக்கு தொடர்பு என சந்தேகமடைந்த சந்துரு, அவரை தீர்த்து முயற்சித்ததாக  விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Related Stories: