நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வழுவதூர் ஊராட்சி காட்டூர் கிராமத்தில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது. வழுவதூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு ஆகியோர் கலந்து கொண்டு, புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தனர்.

இதில், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய செயலாளர் எடையாத்தூர் சரவணன், ஒன்றிய துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன், மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் காட்டூர் அரி, எம்.கே.தினேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணி, மாணவரணி பொறுப்பாளர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: