44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், டி.ஜி.பி சைலேந்திர பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும். போட்டியை சிறப்பாக நடத்த ஆலோசித்து பணிகளை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: