×

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் தகவல்

சென்னை: முகக்கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை  ஐ.ஐ.டி.யில் கொரோனா பரிசோதனை செய்வதை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு  மருத்துவமனைகளிலும்  ஆய்வு செய்தார். அப்போது, பொது சுகாதாரத்துறை  இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனை  டீன் ஜெயந்தி உடனிருந்தனர்.

பின்னர், ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தற்போது  மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்  விதிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை,  காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். ஐ.ஐ.டி.யை  பொறுத்தவரை வடமாநிலங்களில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்களது மாதிரிகள்  மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில்  கொரோனாவுக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 452 படுக்கைகள் தயார் நிலையில்  உள்ளது.

தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை தினசரி 4 ஆயிரம் என்று  குறைந்த நிலையில், நேற்று மட்டும் 1.20 லட்சம் பேர்  தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளி, கல்லூரிகளில் தேவைப்பட்டால் சிறப்பு  மருத்துவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்துகளில் பயணம்  செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Public , Tamil Nadu, mask, fines, Secretary of Public Welfare,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...