“நேரம், உறக்கம் பார்க்காமல் நானும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, கொளத்தூரில் எவர்வின் பள்ளிக் குழுமத்தின் 30ஆம் ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 30ம் ஆண்டு நினைவு கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; மே 7ம் தேதி வந்தால் ஆட்சியில் அமர்ந்து ஒரு ஆண்டு ஆகப் போகிறது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் என கூறும் நிலை வர வேண்டும். நேரம், உறக்கம் பார்க்காமல் நானும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். திமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து தான் பணி செய்கிறோம். எல்லா மாநிலங்களிலும் பேசும் அளவுக்கு தமிழ்நாடு வளர்ந்தது கொண்டிருக்கிறது.

எந்த பொறுப்பில் இருந்தாலும் நான் உங்களில் ஒருவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். வயதானாலும் உள்ளத்தில் இன்னும் மாணவனாக தான் உணர்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் திராவிட பாசறையில் பயின்று கொண்டிருக்கும் மாணவன் நான். மாணவர்களை பார்க்கும்போது எனக்கு 10 வயது குறைந்ததுபோல் இருக்கிறது. தமிழர், இந்தியர் என்று நாம் சொல்லும் அடையாளங்கள் கூட நம்மை இணைக்கும் அடையாளங்களாகத்தான் இருக்க வேண்டும். ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் இல்லாமல் இருக்கவே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது என கூறினார்.

Related Stories: