×

கொடநாடு வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு சிக்கல்?

சென்னை: கொடநாடு வழக்கில் சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. கொடநாடு கொலை, கொள்ள வழக்கில் தனிப்படை போலீஸ் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. சென்னை தியாகராயர் நகர் வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை ஐ.ஜி.சுதாகர், நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தினர். ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ல் கொலை, கொள்ளை நடந்தது. கொண்டாந்து எஸ்டேட் காவலாளியை கொன்று அங்கிருந்த நகை, பணம் முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக தக்கல் வெளியானது.

5 ஆண்டுகளுக்கு பின் கொடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது. கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் சில சென்னை ஓட்டலில் கிடைத்தது பற்றி சசிகலாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. கொடநாடு எஸ்டேட் வாங்கியது எப்போது? அங்கு எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்தது என்னென்ன? ஆவணங்கள், நகை, பணம், வைக்கப்பட்டிருந்ததா? எனவும் கேள்வி. ஆவணங்கள் இருந்தது என்றால் என்னென்ன ஆவணங்கள் இருந்தன? என்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். கொலை, கொள்ளை நடந்த பின் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று பார்த்தீர்களா? என்றும் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன ஆவணங்கள் பற்றி சசிகலா பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் எழுதி வாங்கப்பட்ட கடிதங்கள், பத்திரங்கள் கொடநாட்டில் இருந்ததாக சசிகலா தெரிவித்துள்ளார். சில முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களும் கொடநாட்டில் இருந்ததாக சசிகலா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய ஆவணங்கள் கொள்ளை அடைக்கப்பட்டிருக்கும் என்றும் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரை விசாரணைக்கு அழைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி மேற்கு மண்டலா முக்கிய அதிமுக பிரமுகர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட வாய்ப்பு உள்ளது. தனிப்படை போலீசாரின் விசாரணை தீவிரமடைவதால் மேற்கு மண்டலா அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Tags : Sasikala ,Kodanadu , Private police probe into Kodanadu case: Private AIADMK ministers in trouble?
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!