×

தண்ணீர் குறைந்ததால் மேய்ச்சல் நிலமாக மாறிய காமராஜ் சாகர் அணை

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள காமராஜ் சாகர் அணையில் தண்ணீர் குறைந்து வருவதால் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகள் உள்ளன. குறிப்பாக, அப்பர்பவானி, அவலாஞ்சி, ைபக்காரா ேபான்ற அணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது தவிர, ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் அங்காங்கே கட்டப்பட்டுள்ள சிறிய அணைகளும் மின் உற்பத்திக்கு பயன்பட்டு வருகிறது. இதில் ஒன்று தான் ஊட்டி அருகேயுள்ள காமராஜ் சாகர் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மரவகண்டி, சிங்காரா மற்றும் மாயார் ஆகிய மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு பயன்படுகிறது.

இந்த அணை மழை காலமான ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நிரம்பி காணப்படும். அதன்பின், மழை குறைந்துவிடும். பின்னர், படிப்படியாக அணையில் தண்ணீர் குறைந்துவிடும். இம்முறையும் வழக்கம் போல், கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய மழை தொடர்ந்து எட்டு மாதங்கள் பெய்தது.

வடகிழக்கு பருவமழையும் இரு மாதம் பெய்தது. இருப்பினும், கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யாததாலும், மின் உற்பத்திக்காக அனைத்து அணைகளில் இருந்தும் தினமும் தண்ணீர் எடுக்கும் நிலையில், அனைத்து அணையில் தண்ணீர் அளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. ஊட்டி அருகேயுள்ள காமராஜ் சாகர் அணையில் இருந்து மின் உற்பத்தி மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் உள்ள விலங்குகளுக்காக தினமும் அணையில் தண்ணீர் எடுப்பதால், தண்ணீர் அளது குறைந்துக் கொண்டே செல்கிறது.

இதனால், இந்த அணையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் குறைந்து புல் மைதானமாக காட்சியளிக்கிறது. ஊட்டி அருகேயுள்ள தலைகுந்தா பகுதியில் அணையின் மறுப்பகுதியில் தண்ணீர் அளவு முற்றிலும் குறைந்த நிலையில், தற்போது கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.


Tags : Kamaraj Sagar dam , Ooty: The Kamaraj Sagar Dam near Ooty has become a grazing land for cattle due to declining water. In the Nilgiris district
× RELATED தண்ணீர் குறைந்ததால் மேய்ச்சல் நிலமாக மாறிய காமராஜ் சாகர் அணை