×

காந்தி குடும்பத்தினர் சாராத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கலாம் :தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் பரிந்துரை!!

டெல்லி : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக சோனியா காந்தி தொடரலாம் என்றும் காந்தி குடும்பத்தினர் சாராத ஒருவரை கட்சியின் செயல் தலைவராக நியமிக்கலாம் என்றும் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியை சந்தித்த பிரசாந்த் கிஷோர், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் அடங்கிய செயல் திட்டத்தை அளித்துள்ளார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்கான 5 முக்கிய ஆலோசனைகளை அவர் முன்வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் தலைமை பிரச்னையை சரி செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடரலாம் என்றும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக காந்தி குடும்பம் அல்லாத ஒருவரை நியமிக்கலாம் என்று பிரசாந்த் கிஷோரின் செயல் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இது தவிர ராகுல் காந்தியின் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைப்பது குறித்து கட்சி ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளராக ப்ரியங்கா காந்தியே நியமிக்கலாம் என்றும் கிஷோர் பரிந்துரைத்துள்ளார்.

 600 டிஜிட்டல் பக்கங்களை கொண்ட கிஷோரின் செயல் திட்டத்தில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் 370 முதல் 400 மக்களவை தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சோனியா காந்தி, ராகுல், ப்ரியங்கா காந்தி ஆகியோரை பிரசாந்த் கிஷோர் இன்று சந்திக்க உள்ளார். அப்போது பிரசாந்த் கிஷோர் சமர்ப்பித்த செயல் திட்டத்தின் மீது ஆலோசனை நடைபெறுகிறது.


Tags : Congress ,Gandhi ,Prashant Kishore , Congress, Party, Election, Prasanth Kishore, Nomination
× RELATED உடல் நலக் குறைவு காரணமாக கேரளாவில் ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து