போளிவாக்கம் ஸ்ரீநித்யானந்தா சுவாமிகள் ஆசிரமத்தில் ஸ்ரீ ஷண்முகநாயகன், சித்தர்கள் ஆலய மஹா கும்பாபிஷேகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், போளிவாக்கம் கிராமம், குருபிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமிகள் ஆசிரமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஷண்முகநாயகன் மற்றும் 18 சித்தர்கள் ஞானிகள் ஆலயத்திற்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்களை ஓத கோயில் உச்சியில் அமைக்கப்பட்ட கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா அரோகரா என கோஷமிட்டு சுவாமியை வணங்கினார். பிறகு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் குறிப்பாக இதுவரை எங்கும் நடைபெறாத உத்தம மகான்களுக்கு நடைபெற்ற கும்பாபிஷேக விழா என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஷண்முக நாயகன் மற்றும் 18 ஞானிகளையும் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் ஸ்ரீ ஷண்முக நாயக்கன் திருக்கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பிறகு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை குரு பிரம்ம ஸ்ரீ நித்யானந்தா சுவாமிகள் மற்றும் பிரம்ம ஸ்ரீ சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: