சன் குடும்பம் விருதுகள் விழா: கலக்கலான 2வது பாகம் சன் டிவியில் நாளை மறுநாள் ஒளிபரப்பு

சென்னை: சன் குடும்பம் விருதுகள் விழாவின் கலக்கலான 2வது பாகம் வரும் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சிறப்பாக நடித்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, ‘சன் குடும்பம் விருதுகள்’ பெயரில் விருதுகள் வழங்கி சன் டிவி கவுரவித்து வருகிறது. கலைஞர்களின் திறனையும் உழைப்பையும் கவுரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா லியோமுத்து அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் முதல் பாகம் கடந்த ஏப்ரல் 17ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.விழாவில் விருதுகள் பெற்றவர்கள் விவரம்:சிறந்த காதல் ஜோடி - வருண், பூமிகா (அன்பே வா). கவின், வெண்பா (சித்தி 2). சன் நட்சத்திரம் சிறப்பு விருது - வடிவுக்கரசி, அம்பிகா, சுலோச்சனா, மகாநதி சங்கர். சிறந்த தாய் - மீனா (அபியும் நானும்). சிறந்த பன்முக நாயகன் - கார்த்திக் (சுந்தரி). நகைச்சுவை நாயகன் - ரகு (அபியும் நானும்). சிறந்த பின்னணி குரல் (பெண்) - அக்‌ஷயா (ரோஜா), லக்‌ஷணா (சுந்தரி).

சிறந்த பன்முக நட்சத்திரம் - பிருத்விராஜ் (கண்ணான கண்ணே). சிறந்த மருமகள் - இசை (தாலாட்டு), பூமிகா (அன்பே வா). தங்கமான பாட்டி - அப்பத்தா (வானத்தைப் போல). சிறந்த மருமகன் - யுவா (கண்ணான கண்ணே). சிறந்த இளம் குடும்பத் தலைவி - கயல் (பாண்டவர் இல்லம்). சிறந்த குணச்சித்திர நடிகர் - ராஜபாண்டி (வானத்தைப் போல). குணச்சித்திர நாயகி - அனு (சுந்தரி). சிறந்த வில்லி - மேனகா (கண்ணான கண்ணே), மல்லிகா (சித்தி 2). சிறந்த மாமியார் - கல்பனா (ரோஜா), செல்லத்தாய் (வானத்தைப் போல). சிறந்த ஜோடி - யுவா, மீரா (கண்ணான கண்ணே). சிறந்த கதாநாயகன் - விஜய் (தாலாட்டு), வருண் (அன்பே வா). சிறந்த கதாநாயகி - கயல் (கயல்). சிறந்த மெகாத் தொடர் - கயல்.

வரும் ஞாயிறு ஒளிபரப்பாகும் சன் குடும்பம் விருதுகள் விழா இரண்டாம் பாகத்தில் லட்சக்கணக்கான நேயர்கள் வாக்களித்து தேர்வு செய்த ‘பேவரைட் கேட்டகிரி’ விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் மனம் கவர்ந்த நாயகன், மனம் கவர்ந்த நாயகி, மனம் கவர்ந்த மெகாத் தொடர், மனம் கவர்ந்த வில்லி, மனம் கவர்ந்த ஜோடி ஆகிய விருதுகளை யார் வெல்லப்போகிறார்கள் என்பது நிகழ்ச்சியில் தெரியவரும். விழாவில் சின்னத்திரை கலைஞர்களின் நடனம், கலைநிகழ்ச்சிகளும், திரைக்கலைஞர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.

Related Stories: