×

நிபந்தனையின்றி இணைய பிரசாந்த் கிஷோர் விருப்பம்: காங்கிரசுக்கு `கை’ கொடுக்குமா?

புதுடெல்லி: ஐந்து மாநில தேர்தல் தோல்வி மற்றும் இந்தாண்டு இறுதியில் நடக்கும் குஜராத், ம.பி., இமாச்சல் உள்ளிட்ட 10 மாநிலங்கள் தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் பணியை காங்கிரஸ் தலைவர் சோனியா ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் சோனியா கடந்த 4 நாட்களில் 3 முறை ஆலோசனை நடத்தி உள்ளார். இதையடுத்து, பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைப்பது தொடர்பாக, மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் எந்த நிபந்தனையுமின்றி இணைய விருப்பம் தெரிவித்ததாக அக்கட்சியின் பொது செயலாளர் தாரிக் அன்வர் தெரிவித்துள்ளார்.

சச்சின் பைலட் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான சச்சின் பைலட் சந்தித்து பேசினார். அப்போது, அடுத்தாண்டு ராஜஸ்தானில் நடைபெறும் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்தும், அடுத்த முதல்வராக வேண்டும் என்ற விருப்பத்தையும் சச்சின் பைலட் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags : Prashant Kishore ,Congress , Condition, Prasanth Kishore, Congress,
× RELATED ஆந்திரா சட்டமன்ற தேர்தலில்...