2020-2021ம் நிதியாண்டில் 7 அறக்கட்டளைகளுக்கு ரூ.258 கோடி தேர்தல் நிதி: பாஜ.வுக்கு மட்டுமே 82%

புதுடெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு தனி நபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளியிப்படை தன்மையை ஏற்படுத்துவதற்காக தேர்தல் அறக்கட்டளைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கப்படும். கடந்த 2020-2021ம் நிதியாண்டில் கட்சிகள் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக பெற்ற நிதியுதவி குறித்து ஜனநாய சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 23 தேர்தல் அறக்கட்டளைகளில் 16 அறக்கட்டளைகள் கடந்த 2020-2021ம் நிதியாண்டில் தங்களது பங்களிப்பு குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்பித்துள்ளன. இதில் 7 அறக்கட்டளைகள் தாங்கள் நன்கொடைகள் பெற்றதாக அறிவித்துள்ளன. 7 அறக்கட்டளைகளும் மொத்தம் ரூ.258.4915கோடியை நிறுவனங்கள்  மற்றும் தனிநபர்களிடம் இருந்து நன்கொடையாக பெற்றுள்ளன. இதில் 258.4301கோடியை பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் விநியோகித்துள்ளன.

இதில் பாஜ மட்டும் ரூ.212.05கோடி அல்லது மொத்த நன்கொடையில் 82.05சதவீதம் நன்கொடையை பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியானது ரூ.27 கோடி அல்லது 10.45சதவீத நிதியை பெற்றுள்ளது. காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அதிமுக, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பத்து கட்சிகள் மொத்தம் ரூ.19.38கோடியை பெற்றுள்ளன.

Related Stories: