×

‘நான் உனை நீங்க மாட்டேன்’ மோடிக்கு ஆதரவாக இளையராஜா மீண்டும் டிவிட்

சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், ‘மோடியும், அம்பேத்கரும் ஒன்று’ என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையதளங்களில் இதற்கு எதிரான கருத்துகளும், கடுமையான விமர்சனங்களும் பரவியது. இதையடுத்து, ‘என் கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்’ என்று, தனது தம்பி கங்கை அமரன் மூலம் இளையராஜா பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், இளையராஜா நேற்று பாடல் வடிவில் ஒரு டிவிட் வெளியிட்டிருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடித்திருந்த ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலில் இடம்பெற்றிருந்த ‘நான் உனை நீங்க மாட்டேன். நீங்கினால் தூங்க மாட்டேன். பாடுவேன் உனக்காகவே. இந்த நாள் நன்னாள் என்று பாடுவேன்’ என்ற வரிகளை இளையராஜா பாடியிருந்தார். ‘நான் உனை நீங்க மாட்டேன்’ என்று அவர் மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் பதிவு வைரலானது.

Tags : Ilayaraja ,Modi , Modi, Ilayaraja, Dwight
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்