×

தண்டையார்பேட்டை பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் எபினேசர் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்ட பேரவையில் சமூக நலன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை மீதான விவாதத்தில் ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ எபினேசர் (திமுக) பேசியதாவது:
தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்பரேஷன் கம்பெனிக்கு அருகில் உள்ள தெற்கு ரயில்வேக்கு சொந்தமான 16 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை பேருந்து நிறுத்துமிடமாக 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு, பேருந்து நிலையம் அமைய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும். திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். 43வது வார்டில் உள்ள பவர்குப்பம் திட்ட பகுதியில் உள்ள 15, 16ம் பிளாக் குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதால்சீரமைத்து தர வேண்டும்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இங்கு மலைபோல் குவியும் குப்பை சரிவர அகற்றப்படுவதில்லை. எனவே, தமிழக அரசு துறைமுக பொறுப்புக் கழகத்திடம் வலியுறுத்தி குப்பையை அகற்றிடவும், புதிய மின் விளக்குகள், சிசிடிவி கேமராக்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Thandayarpet ,Ebenezer MLA , Thandayarpet, Railway, Bus Stand, Ebenezer MLA
× RELATED தண்டையார்பேட்டையில் நெட்சென்டர்...