×

ரேலா மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் சிறுநீரக புற்றுநோய் கட்டி அகற்றம்

சென்னை: சென்னை ரேலா மருத்துவமனையின் சிறுநீரக புற்றுநோய் ஆலோசகர் டாக்டர் வசந்தராஜா ராமசாமி கூறியதாவது:
 கொல்கத்தாவை சேர்ந்த ராஜா சுர் (47) என்பவருக்கு சிறுநீர் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதித்தபோது, 2 சிறுநீரகங்களிலும் 5 செ.மீ. அளவுக்கு புற்றுநோய் கட்டி இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், உயர்தர மருத்துவ பரிசோதனைக்காக அவர் சென்னை ரேலா புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை, எனது தலைமையிலான டாக்டர்கள் பரிசோதனை செய்து, இரண்டு கட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகங்களில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அகற்ற முடிவு செய்தோம். அதன்படி கடந்த மாதம் 22ம் தேதி நோயாளியின் வலது சிறுநீரகத்தின் கட்டி அகற்றப்பட்டது. பின்னர், 2வது நாள் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது வலது சிறுநீரகம் 60 சதவீதம் செயல்பாட்டு வந்தது.

இடது கிட்னியில் கட்டி பெரிய அளவில் இருந்ததால், கடந்த 5ம் தேதி அந்த கிட்னியை முழுவதுமாக அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளிக்கு டயாலிசிஸ் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் அவர் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அவரது சிறுநீரகம் தினசரி போதுமான அளவு சிறுநீரை வெளியேற்றி இயல்பு நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ரேலா மருத்துவமனை தலைவரும், பேராசிரியருமான முகமது ரேலா கூறுகையில், ‘சர்வதேச தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எங்களின் ரேலா புற்று நோய் மையம் வழங்கி வருகிறது. இங்கு அனைத்து விதமான புற்று நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நாட்டில் உள்ள நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறு நுண்துளையீட்டு நடைமுறையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றார்.

Tags : Rela Hospital , Rela Hospital, Robotic Surgery, Kidney Cancer Tumor
× RELATED 42வயது குஜராத் பெண்ணுக்கு இரட்டை...