கேட்டு கேட்டு பார்த்தேன் கிடைக்கவில்லை, கேட்காமல் கிடைத்துள்ளது: ஜி.கே.மணி நகைச்சுவை பேச்சு

சென்னை: விளையாட்டு துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். முதல்வரின் அறிவிப்பினை வரவேற்று உறுப்பினர்கள் பேசினார்கள். பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, ‘‘நான் கூட கேள்வி நேரத்தின்போது கைகளை தூக்கி கேட்டுள்ளேன். ஆனால் பேரவை தலைவர் கொடுக்கவில்லை (அவரின் பேச்சை கேட்டு முதல்வர், சபாநாயகர் புன்னகைத்தனர்). கேட்டு கேட்டு பார்த்தேன், இன்று கேட்காமல் கிடைத்துள்ளது. முதல்வர் அறிவிப்புகள் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். ஜி.கே.மணியின் பேச்சால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

Related Stories: