×

கோவையை புறக்கணிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சென்னை: திருச்செங்கோடு இ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) பேசுகையில், ‘‘அவினாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தை சேலம்-கொச்சி சாலையில் உள்ள நிலம்பூர் சந்திப்பு வரை விரிவாக்கம் செய்ய வேண்டும்’’ என்றார். இதற்கு பதிலளித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: கோவை பத்திரிக்கையில், தமிழக அரசு கோவையை புறக்கணிக்கிறதோ என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் பல்வேறு திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டு வருகிறது. தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான கோவையை புறக்கணிக்கும் எண்ணம் திமுக ஆட்சிக்கு இல்லை. அவினாசி மேம்பாலம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டது. மேம்பால பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். விரைவாக பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1,000 கோடி அரசு செலவு செய்கிறது என்றால் கோவைக்கு அரசு முக்கியம் தருகிறது என்று தான் பொருள். போக்குவரத்து செறிவு என்பது தற்போது பாலம் போடும் இடம் வரை தான் உள்ளது. அதை நீட்டிக்க வேண்டுமா, தேவை உள்ளதா என்பதை கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.



Tags : Coimbatore ,Minister ,EV Velu , Government has no intention of boycotting Coimbatore: Minister EV Velu talks
× RELATED மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள்: கோவை...