×

ஒன்றிய அரசின் டிரோன் தயாரிக்கும் திட்டத்திற்கு அண்ணா பல்கலை தக்‌ஷா குழு தேர்வு

சென்னை: நாட்டில் டிரோன்கள் தயாரிப்பு மற்றும் வடிமைப்பில் முன்னணியில் உள்ள 5 நிறுவனங்களை ஒன்றிய அரசு தேர்வு செய்துள்ளது. அதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு, ஒன்றிய அரசின் ஊக்கத்தொகையை பெறவும், ஒன்றிய விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து தேவையின் அடிப்படையில் டிரோன்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையை சேர்ந்த ஜூப்பா ஜியோ நேவிகேஷன் டெக்னாலஜிஸ் என்கிற டிரோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தக்‌ஷா என்ற மாணவர்கள் குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித்குமார் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Anna University ,Thaksin Shinawatra ,United States , Anna University Thaksin Shinawatra Selection for United States Drone Production Project
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு