தேசிய கால்பந்தாட்ட அணிக்கு அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தேர்வு

காரைக்குடி: தேசிய கால்பந்தாட்ட அணிக்கு அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரியில் தமிழ்நாடு யூத் ஸ்போர்ட்ஸ் சார்பில் மாநில அளவிலான ஆடவர் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். இதையடுத்து இவர்கள், ஜூன் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி, உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.

Related Stories: