மனைவியைக் கொன்றுவிட்டு சடலத்துடன் தூங்கிய கணவன்: கடலூரில் பரபரப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடக்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(42) இவர் மனைவி தீபா(35)  கட்டிட தொழிலாளியான இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி தீபா உடன் தகராறு செய்வர் என்பது புகார் இந்த தம்பதிக்கு எட்டு வயதில் மகனும், ஐந்து வயதில் மகளும் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆனந்த் குடித்து விட்டு வந்து மனைவி தீபாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது உருட்டு கட்டையால் மனைவியை சரமாரியாக தாக்கியதில் தீபா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்துவிட்டார். போதையில் இருந்த ஆனந்தனுக்கு மனைவி இறந்தது தெரியவில்லை அவரும் போதையில் அதே இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். காலை வெகு நேரமாகியும் வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது தீபா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது அதிர்ச்சி அடைந்தனர். அவர் அருகிலேயே ஆனந்த் உடல் அசைவற்ற நிலையில் பிணம் போல் கிடந்ததால் அவரும் இறந்து விட்டதாக நினைத்து அண்ணாமலை நகர் காவல்நிலையதுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீபா ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது அப்போது ஆனந்த் உடல் நெளிந்ததால் அவருக்கு போதை இன்னும் தெளியவில்லை என்று அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் தீபாவின் சடலம் உடற்கூராய்விற்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீபாவின் உறவினர்கள் ஆனந்த் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதையடுத்து ஆனந்த் மீது கொலை வழக்கு போடப்பட்டு கைது செய்தனர்.

Related Stories: