×

லால்குடியில் பதுக்கி வைத்திருந்த 514 மூட்டை ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்: மில் உரிமையாளர் தப்பி ஓட்டம்

லால்குடி: லால்குடியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 514 ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கியது மில் உரிமையாளர் தப்பி ஓடி விட்டார்.திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக லால்குடியில் இருந்து மாவட்ட வழங்கல் அதிகாரி இளவரசியிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் லால்குடி ஆர்டிஓ வைத்தியநாதன் உத்தரவின் பேரில் லால்குடி வட்ட வழங்கல் அதிகாரி விஜய், அபிஷேகபுரம் கிராம நிர்வாக உதவியாளர் அரிகிருஷ்ணன் மற்றும் லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோருடன் லால்குடி தேரடி வீதி தேரடி பகுதியில் அமைந்துள்ள மதி டிரேடர்ஸ்க்கு சொந்தமான கடைகளில் சோதனை செய்தனர்.

அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் கடத்தி செல்வதற்காக லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதில் 230 ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து அதிகாரிகள் சோதனை செய்தபோது, குடோனில் அடைத்து பதுக்கிவைக்கப்பட்டிருந்த 314 ரேஷன் அரிசி மூட்டைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் ஒரு மூட்டை கோதுமை உள்பட 515 மூட்டைகள் அரிசி கடத்தலுக்கு பயன் படுத்திய லாரியையும் கைப்பற்றினர். அதிகாரிகள் தொடர்ந்த நடந்த சோதனையில் தலைமறைவான அரிசி மில் மற்றும் கடையை நடத்தி வந்த லால்குடி தேரடி வீதி மதியழகன் செட்டியார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Lalgudi , 514 bundles stored at Lalgudi Seizure with ration rice truck: Mill owner flees
× RELATED லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 100...