×

தனது காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய 15 வயது சிறுமி: காதலன் போக்ஸோ சட்டத்தில் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கட்டையால் அடித்து பாழடைந்த வீட்டில் வீசி சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் புதிய திருப்பமாக சிறுமி காதலனுடன் சேர்ந்து நாடகமாடியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருவாரூர் அருகே வசித்து வரும் தந்தையை இழந்த 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் வசித்து வருகிறார். 10-ம் வகுப்பை இடையில் நிறுத்திய சிறுமி தனது தாயுடன் வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி வைத்துள்ளனர்.

அப்பொழுது சிறுமியை பின்தொடர்ந்து வந்த 2 பேர் உருட்டுகட்டையால் சிறுமியின் பின்தலையில் தாக்கியதாகவும், மயக்கமடைந்தவரை இரண்டு கைகளையும் கட்டி வாயில் துணியை வைத்து தூக்கிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடைக்கு சென்ற சிறுமியை காணவில்லை என அவரது அத்தை மற்றும் அம்மா ஆகியோர் தேடியுள்ளனர். இதுகுறித்து புறவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஒரு மணிநேரத்திற்கு பிறகு சிறுமி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் யாரும் குடியில்லாத வீட்டில் மயக்க நிலையில் சிறுமி கிடந்ததை கண்டு அப்பகுதியே வந்தவர்கள் அச்சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து புறவாசல் காவல்துறையினர் நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையில் 3 பெண் காவலர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமியிடம் மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த விசாரணையில் 15 வயது சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த பொறியியல் படிக்கும் மாணவர் சந்தோஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. மளிகை பொருட்கள் வாங்க சென்ற சிறுமி அவரது வீட்டிற்கு தெரியாமல் சந்தோஷுடன் தனிமையில் நீண்ட நேரம் பேசியுள்ளார்.

சிறுமியின் தாய் அவரை தேடிய நிலையில் வீட்டில் மாட்டிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் தானே தனது கைகளை கட்டிக்கொண்டு பாழடைந்த வீட்டில் மயக்கமடைதிருப்பதாக நடித்துள்ளார். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இச்சம்பவம் தெரிய வந்த நிலையில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவரான அச்சிறுமியின் காதலன் சந்தோஷ் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.

15 வயது சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : 15-year-old girl who played with her boyfriend: Boyfriend arrested under box law
× RELATED குண்டாஸ் முடிந்து வெளியே வந்த ஒரு...