அரசியலில் அண்ணாமலை சப் ஜூனியர்: திருமாவளவன் காட்டம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் விசி தலைவர் திருமாவளவன் நேற்று பங்கேற்றார். கீழையூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மாநில அரசுகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்து வரும் நிலையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.  இசையமைப்பாளர் இளையராஜா இன்று வரை அம்பேத்கர் படத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தியுள்ளாரா. பல்வேறு இடங்களில் தலித் மக்கள் பாதித்தபோது குரல் கொடுத்துள்ளாரா. அம்ேபத்கர் பற்றி அவருக்கு என்ன தெரியும்.

பாஜ அரசு பிளாக்மெயில் செய்து இளையராஜாவை மிரட்டி அம்பேத்கரும், மோடியும் ஒரே நிலைப்பாட்டை கொண்டவர்கள் என்று சொல்ல வைத்துள்ளது. அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கூட அவருடைய பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள திமுக அரசு தான், அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். காரைக்காலில் திருமாவளவன் அளித்த பேட்டியில், புதுச்சேரியில் பாஜவினர் சூது, சூழ்ச்சி செய்து கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வர நினைக்கின்றனர். அரசியலில் பாஜ தலைவர் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர் என்றார்.

Related Stories: