×

சிஎஸ்கே.வுடன் இன்று மோதல்; முதல் வெற்றி பெறுமா மும்பை?

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று மும்பை-சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பாட்டில் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இதில் மும்பை தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும். சென்னை தோற்றால் இனிவரும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா, சாவா என்ற நிலைதான் ஏற்படும். எனவே இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 14 சீசனில், சிஎஸ்கே, மும்பை அணியும் மட்டும் சேர்த்தால் 9 கோப்பைகளை வென்றுவிட்டன. அவ்வளவு ஆதிக்கம் செலுத்திய இந்த அணிகளுக்கு, ஐபிஎல் மெகா ஏலம் ஒரு பேர் இடியை தந்தது. 2 அணியும் கட்டிவைத்திருந்த கட்டமைப்பு உடைக்கப்பட்டது. இதன் விளைவாக இரு அணிகளும், ஐபிஎல் புள்ளி பட்டியலில் அடி பாதாளத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த இரு அணிகளிலும் தற்போது பலத்தை விட பலவீனம் தான் அதிகமாக உள்ளது. மும்பை அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியை காப்பாற்றவில்லை. ஆனால் சென்னை அணியை பொறுத்தமட்டில் வேகப்பந்துவீச்சில் பிராவோ மட்டும் தான் அணியின் மானத்தை காப்பாற்ற போராடுகிறார். மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் எதிரணியை பயமுறுத்தும் வகையில் பந்துவீசுவதில்லை. இது அந்த அணியின் பெரும் தலைவலிக்கு காரணம். அந்த வகையில் சிஎஸ்கே அணியில் மகேஷ் தீக்சனா நன்றாக வீசுகிறார். இருப்பினும் ஜடேஜா, மொயின் அலி தங்களது கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாமல் இருப்பது பின்னடைவை தருகிறது. மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் தான் பெரிய குறையாக உள்ளது.

அது சரியானால், அந்த அணியின் பாதி பிரச்சினை முடிந்துவிடும். பிரவீஸ், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் அந்த அணியின் பலமாக விளங்குகின்றனர். சிஎஸ்கேவை பொறுத்தவரை எந்த ஒரு வீரரும் தொடர்ந்து ரன் அடிப்பதில்லை. ருதுராஜ், உத்தப்பாவுடன் சேர்ந்து ரன் குவிக்க வேண்டும். ஜடேஜா, துபே, டோனி, மொயின் அலி, ராயுடு ஆகியோர் பழைய ஃபார்ம்க்கு வந்தால் மட்டுமே சிஎஸ்கே தப்பிக்க முடியும். மும்பை அணியை பொறுத்தவரை பிளேயிங் லெவனில் இருக்கும் வீரர்கள் சரியாக விளையாடினாலே அந்த அணிக்கு சிக்கல் இல்லை. மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும். சென்னை தோற்றால் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா என்ற நிலைதான்.


Tags : CSK ,Mumbai , Conflict with CSK today; Will Mumbai win first?
× RELATED பதிரானாவை தவிர அனைவரும் வேகத்தை குறைத்தோம்: ஷர்துல் தாக்கூர் பேட்டி