ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய லீக் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதல்

மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. ரவிந்திர ஜடேஜா தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

முன்னாள் சாம்பியன் அணியான ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி வெற்றியை பதிவு செய்ய முடியாமல் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இவ்விரு அணிகளின் பிளேஆஃப் கனவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. 9 ஐபிஎல் கோப்பைகளை வென்ற இவ்விரு அணிகளும் புள்ளிபட்டியலில் 9, 10 ஆகிய இடங்களில் இருப்பது ஐபிஎல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. இதேபோல் தங்கள் அணிக்கான முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டி மும்பையில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.

Related Stories: