×

நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.6.82 கோடி மதிப்பிலான 5 மகிழுந்துகள், 80 ஈப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (21.4.2022) தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 82 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 மகிழுந்துகள் மற்றும் 80 ஈப்புகளை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை வழங்கினார்.  

2021-2022 ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில், நீர்வளத் துறையின் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் 3 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், 2021 - 2022 ஆண்டில் 5 மகிழுந்துகள் மற்றும் 71  ஈப்புகள், 6 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2022-2023 ஆண்டில் 40 ஈப்புகள், 3 கோடியே 30 இலட்சம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும்,  2023-2024 ஆண்டில் 40 ஈப்புகள், 3 கோடியே 46 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி  2021-2022 ஆம் ஆண்டில் 6 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 5 மகிழுந்துகள் மற்றும் 71 ஈப்புகள் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனபடுத்தும் திட்டத்தின் கீழ், நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 68 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 9 ஈப்புகள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன்,  தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.கு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.
•••••••••

Tags : Resources ,Chief Minister ,MK Stalin , Water Resources, Vehicles, Eeps, Chief MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...