கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டனவா? சசிகலாவிடம் விசாரணையை தொடங்கியது தனிப்படை போலீஸ்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலாவை விசாரிப்பதற்காக ஐ.ஜி. சுதாகர், நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூா்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன் உள்ளிட்டோர் விசாரணை நடத்த உள்ளனர். உதகை ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இதுவரை 217 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. கோடநாடு வழக்கில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உதகை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார் ஓட்டுனர் கனகராஜ் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணகை்கு ஒத்துழைப்பதாக வழக்கறிஞர் மூலம் சசிகலா தெரிவித்திருந்தார். ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் கொலை, கொள்ளை நடந்தது. கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்று அங்கிருந்த நகை, பணம் முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல் வெளியானது. 5 ஆண்டுகளுக்கு பின் கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டனவா என சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளது. கோடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் சில சென்னை ஓட்டலில் கிடைத்தது பற்றி சசிகலாவிடம் கேள்வி கேட்க தனிப்படை முடிவு செய்துள்ளது.

Related Stories: