உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்தில் சென்ற போது மின்சாரம் பாய்ந்து 3 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு: 2 போ் கைது

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்தில் சென்ற போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தான். பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது பள்ளி மாணவன் ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு எட்டிப்பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில் மின்கம்பம் சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அதிரமடைந்து சிறுவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: