×

நகை பிரியர்கள் வேதனை..: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 48 உயர்ந்து, ரூ.339,752 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. இந்நிலையில், நகை பிரியர்களை வேதனைப்படும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆம் சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து காணப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,969 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,752 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 73.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனினும் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Tags : Sawara , Jewelry lovers in agony ..: The price of jewelery gold is Rs. 48, selling for Rs. 339,752
× RELATED ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சவரனுக்கு...