புதைவட கம்பி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பேரவையில் பிரபாகர் ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் துணை கேள்வி எழுப்பி விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசுகையில், `விருகம்பாக்கம் தொகுதியை பொறுத்தவரை அதிகம்  மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருக்கிறது. குறிப்பாக கடந்த காலங்களில் பணிகள் மெத்தனமாக நடந்ததால் வெறும் 37 சதவீதம் பணிகள்தான் புதைவிட கம்பி புதைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜாயிண்ட் அவுஸ் என்று சொல்வார்கள், ஓட்டு வீடுகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. எம்ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம், கே.கே.நகர், சாலிகிராமம் பகுதிகளில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணியை அரசு விரைந்து செய்து தர வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், `விருகம்பாக்கம் பகுதியில் செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைய வேண்டும் என்பது முதல்வரின் உத்தரவு. முதல்வரின் உத்தரவுப்படி அந்த பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் முடிக்கப்படும்’ என்றார்.   

Related Stories: