சேஷ வாகன சேவையில் வேணுகோபால சுவாமி விதி உலா

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம்  கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் சிறப்பு பெற்றதாகும். திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான இக்கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான  பிரமோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விழாவையொட்டி தினமும் ருக்மணி, சத்தியபாமா சமேத சந்தான வேணுகோபால சுவாமி உற்சவர் வாகன சேவையில் எழுந்தருளி கிராம வீதி உலா நடைபெற்று வருகின்றது. விழாவில், 4வது நாளான நேற்று முன்தினம் இரவு சேஷ வாகன சேவை நடைபெற்றது. கோயில் அர்ச்சகர் குமார் பட்டாச்சாரியார் தலைமையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் தொடர்ந்து உற்சவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். 

Related Stories: