இந்திய விமானப்படை சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஆவடி: ஆவடியில் உள்ள இந்திய விமானப்படை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஆவடி அடுத்த மோரை, ஜெ.ஜெ.நகரில் நேற்று நடைபெற்றது. இந்திய விமானப்படையின் ஏர்கமாண்டர் சிவகுமார் தொடங்கிவைத்தார். முகாமில் ஏழை எளிய பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண், பல் பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் 300க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். விமானப்படை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் இந்திய விமானப்படை குரூப் கேப்டன் பொற்செழியன், மோரை ஊராட்சி தலைவர் திவாகரன் உள்பட விமானப்படை அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: