×

காஞ்சிபுரத்தில் மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

காஞ்சிபுரம்: மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு காஞ்சிபுரம் பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. போட்டிகளை, கலெக்டர் ஆர்த்தி துவக்கி வைத்தார்.இதில் கை, கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீ, 100 மீ, 500 மீ ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி பந்தயம், பார்வையற்றோர்களுக்கு 50 மீ, 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், பூப்பந்து எறிதல், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீ, 100 மீ ஓட்டம், மென் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதோருக்கு 100 மீ, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய போட்கள் நடத்தப்பட்டன.

மேலும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கு இறகு பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) ஒரு குழுவில் 5 போ், மேஜை பந்து (ஒரு குழுவில் 2 பேர்), பார்வையற்றோர்களுக்கு கையுந்து பந்து (ஒரு குழுவில் 7 பேர்), மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து (ஒரு குழுவில் 7 பேர்), காது கேளாதோருக்கு கபடி ((ஒரு குழுவில் 7 பேர்)) என குழுப்போட்டிகளும் நடந்தன. இப்போட்டியில் 300 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் இடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

* பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட மாநாடு
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 4வது மாநாடு திருப்போரூரில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தாட்சாயிணி வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் அருள்ராணி, திருஞான சம்பந்தன், பூபதி, ரமீலா, ராஜ்குமார், அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில துணைத் தலைவர் பாரதி அண்ணா, மாநில துணை தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் குளிர்சாதன பஸ்களை தவிர அனைத்து பஸ்களிலும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்க அரசாணை உள்ளது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. அந்த ஆணையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். திருப்போரூர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் திருப்போரூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். அறநிலையத்துறை கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய தனி வழி ஏற்படுத்த வேண்டும். அனைத்து பஸ் நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறைகள் அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Kanchipuram , District level sports competitions for the alternatively abled in Kanchipuram
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...