×

திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட மக்களுக்காக காவிரி நீரை ஆதாரமாக கொண்டு ரூ.9,680 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: துணை சபாநாயகர் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி (திமுக) பேசுகையில், ”தென்பெண்ணையாறு  கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலே வேட்டவலத்திற்கு தண்ணீர் வருகிறது.  விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் என இரண்டு மாவட்டங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதுபோன்ற பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், செங்கம் போன்ற பகுதிகளுக்கு எல்லாம் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உட்கார்ந்து பேசி இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்து வைத்தால் தான் இந்த கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியும்.

மாதந்தோறும் 2 மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதுபோல பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்ட கூட்டுக் கூட்டங்களை நடத்தி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோடு கலந்து கொண்டு, இதுபோன்ற பிரச்னைகளை தீர்த்து வைத்தால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் சிறப்பாக செயல்படும். இதனை அரசு மேற்கொள்ள வேண்டும். அமைச்சர் கே.என்.நேரு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதிக்கும் காவிரியை நீர் ஆதாரமாகக் கொண்டு ரூ.9,680 கோடி செலவில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை இப்போது அறிவித்திருக்கிறார்.

அது ஆய்வில் இருக்கிறது. விரிவான திட்ட அறிக்கையும் வந்திருக்கிறது. விரைவில் அதற்கான ஒப்புதலைப் பெற்று அந்தத் திட்டத்தை தொடங்குவதற்குரிய முயற்சிகளை எடுத்திருக்கிறோம். எனவே,  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ள முழு கொள்ளளவு தண்ணீரையும் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என்றார்.

Tags : Thiruvannamalai, Vellore District ,Cauvery ,Minister ,KN Nehru ,Deputy Speaker , Thiruvannamalai, Vellore, Cauvery Water, New Joint Drinking Water Project, Deputy Speaker
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி