எடப்பாடி பழனிசாமி பேட்டி காவல்துறை சரியாக செயல்படவில்லை

சட்டசபையில் இருந்து வெளியேறிய பின் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளிக்கையில், ‘‘தமிழக ஆளுநர்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஆளுநர்  பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்தும், ஆளுநர் பாதுகாப்பில் காவல்துறை தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை.

ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற போர்வையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை முன்கூட்டியே ஏன் கவனிக்கவில்லை. எனவே ஆளுநருக்கு ஏற்பட்ட இந்த நிலை மிகமிக கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது. இது ஒரு திட்டமிட்ட செயலாக மக்கள் பார்க்கிறார்கள். இந்த செயலை அதிமுக வன்மையாக கண்டித்து சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்’’ என்றார்.

Related Stories: