×

ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையத்தில், இந்திய வனப்பணி முதன்மை தேர்விற்காக 12 பேர் தங்கி பயின்றார்கள். அவர்களில் 3 பெண்கள் உட்பட 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.   

இந்த பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற ஆர்வலர்களும், பயிற்சி மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி  ஆளுமை தேர்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தை aicscc.gov@gmail.com என்ற  மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 9444286657 என்ற புலன் எண்ணிற்கோ (வாட்ஸ்-அப்) அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

மாதிரி ஆளுமை தேர்விற்கான தேதி குறித்த விவரங்கள் இந்த பயிற்சி மையத்தின் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விரைவில் அறிவிக்கப்படும்.  மாதிரி ஆளுமை தேர்வில் கலந்து கொண்டு  டெல்லி செல்லும் ஆர்வலர்களுக்கு, பயணச்செலவு தொகையாக ரூ.5000  வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : All India Civil Service Exam Training Center , Poor, simple activists, All India Civil Service Examination, Training Center
× RELATED அகில இந்திய குடிமைப்பணி தேர்வு...