×

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு 2 பேராசிரியர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  சென்னை ஐஐடியில் 2016 முதல் 2020ம் ஆண்டு வரை பிஎச்டி படித்த மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவி ஐஐடி விடுதியில் தங்கினார். இதனிடையே, தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் மாணவி புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் 2 பேராசிரியர்கள் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐஐடி வேதியியல் துறையை சேர்ந்த பேராசிரியர்கள் எடமன பிரசாத், ரமேஷ் எல்.கர்தாஸ் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை ஐகோட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பேராசிரியரின் பொறுப்பில் உள்ள ஆய்வகத்தில் தான் அந்த மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், முதலாவதாக குற்றம்சாட்டப்பட்ட நபரான முன்னாள் மாணவர் கிங்சோ தேபர்மனின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேராசிரியர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, பேராசிரியர்கள் இருவரும் தமிழகத்தை விட்டு செல்லக்கூடாது. என்று நிபந்தனை விதித்து இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Tags : Chennai ,IIT , Chennai IIT, Student Sexual Abuse, Conditional Pre-Bail for Professors, High Court
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!