குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வு தமிழ், ஆங்கிலத்தில் வினாத்தாள்

சென்னை: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் தேர்வுக்கான முதல் தாள் வினாத்தாள் தமிழ், ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 19ம் தேதி (முற்பகல், பிற்பகல்) நடைபெறும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்விற்கு தாள் 1ல் அடங்கிய சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் குற்றவியல் விருப்பப் பாடங்களின் வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: